என் மலர்

  செய்திகள்

  வட கொரியாவை முற்றுகையிட்டுள்ள அமெரிக்க கப்பல்களை பாதுகாக்க கிளம்பியது ஜப்பான் போர்க்கப்பல்
  X

  வட கொரியாவை முற்றுகையிட்டுள்ள அமெரிக்க கப்பல்களை பாதுகாக்க கிளம்பியது ஜப்பான் போர்க்கப்பல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அங்கு முற்றுகையிட்டுள்ள அமெரிக்க கப்பல்களை பாதுகாக்கும் பணிக்காக ஜப்பானிய போர்க்கப்பல் புறப்பட்டுள்ளது.
  டோக்கியோ:

  உலக நாடுகளை அச்சுறுத்தும் விதத்தில் தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது வடகொரியா. இதன் காரணமாக, வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து மிகக் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன.

  கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வரும் நிலையிலும், வடகொரியா தனது நிலையில் இருந்து பின்வாங்காமல் தற்காப்பு என்ற பெயரில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. தென்கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து தங்கள் நாட்டின்மீது போர் தொடுக்க ஆயத்தமாகி வருவதாக குற்றம்சாட்டி வரும் வடகொரியா, அமெரிக்காவை அழித்து விடுவோம் என்றும் மிரட்டியது.

  இதனையடுத்து, வட கொரியாவை அச்சுறுத்தும் விதமாக அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் நீர் மூழ்கிக்கப்பல்கள் கொரிய தீபகற்ப கடல்பகுதியை முற்றுகையிட்டுள்ளன. இந்நிலையில், ஜப்பான் தன்னுடைய மிக பெரிய போர்க்கப்பலை அமெரி்க்க போர்க்கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்க அனுப்பியுள்ளது.

  ஜப்பானின் கடற்பரப்பிற்குள் இருக்கும் அமெரிக்க விநியோகக் கப்பலுக்கு ஹெலிகாப்டர் தாங்கியான `ஈஸூமோ` போர்க்கப்பல் பாதுகாப்பு வழங்குகிறது. மேலும், அமெரிக்கா `கார்ல் வின்சன்` விமானந்தாங்கி கப்பல் உள்பட அமெரிக்க கடற்படைக் கப்பல்களுக்கு பாதுகாப்பு பணி மற்றும் எரிபொருள் நிரப்புவதற்காக, டோக்கியோவின் தெற்கிலுள்ள யோகோசுகாவிலுள்ள தளத்திலிருந்து புறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  இந்த பிராந்தியத்தில் அதிகரித்து வருகின்ற பதட்டங்களுக்கு மத்தியில் `கார்ல் வின்சனை`யும், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றையும் மூழ்கடித்து விடுவதாக வட கொரியா மிரட்டியுள்ளது.

  ஜப்பான் தற்போது பாதுகாப்பிற்கு அனுப்பியுள்ள `இஸூமோ` போர்க்கப்பல் ஜப்பான் கடற்படையின் பெருமையாக பார்க்கப்படுவதோடு, இதுவரை அந்நாட்டில் இருக்கும் மிக பெரிய போர்க்கப்பலாக இருக்கிறது. 249 மீட்டர் நீளம் கொண்ட இஸூமோ போர்க்கப்பல் 9 ஹெலிகாப்டர்களை சுமந்து செல்லும் சக்தியுடைது என்றும், அமெரிக்காவின் நீரிலும், நிலத்திலும் தாக்குதல் நடத்தும் விமானந்தாங்கிகளை போன்றது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
  Next Story
  ×