என் மலர்

  செய்திகள்

  வழக்கு தொடர்ந்ததும் வழிக்கு வந்த ஆப்பிள்
  X

  வழக்கு தொடர்ந்ததும் வழிக்கு வந்த ஆப்பிள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐபோன்களின் வேகம் சார்ந்த விவகாரத்தில் சட்ட சிக்கல்களை எதிர்கொண்டிருக்கும் ஆப்பிள் பேட்டரி மாற்றுவதற்கான கட்டணங்களை குறைப்பதாக அறிவித்துள்ளது.
  புதுடெல்லி:

  பழைய ஐபோன்களின் வேகத்தை பேட்டரி பிழை மூலம் வேண்டுமென்றே குறைத்ததை ஆப்பிள் நிறுவனம் ஒப்பு கொண்டதை தொடர்ந்து பேட்டரி மாற்றுவதற்கான கட்டணங்களை ஆப்பிள் நிறுவனம் குறைப்பதாக அறிவித்துள்ளது. மேலும் பேட்டரியின் உண்மை நிலையை அறிந்து கொள்ள மென்பொருள் ரீதியிலான மாற்றங்களை செய்ய இருப்பதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.

  இதுகுறித்து ஆப்பிள் வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ள தகவல்களில் பேட்டரி பிழை பிரச்சனைக்கு மன்னிப்பு கோரியுள்ளதோடு, வாடிக்கையாளர்கள் நன்மைக்கு தேவையான மாற்றங்களை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளது. வாரண்டி இல்லாத சாதனங்களுக்கான பேட்டரியை மாற்றும் போது 79 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.5,000 வரை வசூலித்து வருகிறது.  அந்த வகையில் அடுத்த மாதம் முதல் பேட்டரியை மாற்றுவதற்கான கட்டணத்தை 30 டாலர்கள் குறைத்து 29 டாலர்களுக்கு சரி செய்து வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த விலை விவரம் ஐபோன் 6 மற்றும் அதற்கும் அதிக மாடல்களுக்கு பொருந்தும். இத்துடன் புதிய ஐ.ஓ.எஸ். அப்டேட் மூலம் பேட்டரியின் நிலையை அறிந்து கொள்ள வழி செய்வதாக ஆப்பிள் அறிவித்துள்ளது.

  டிசம்பர் 20-ம் தேதி ஐபோன்களின் மென்பொருள், சாதனத்தின் பேட்டரி பிரச்சனை ஏற்படும் போது ஐபோனின் வேகத்தை குறைக்கும் திறன் கொண்டிருப்பதாக ஆப்பிள் தெரிவித்திருந்தது. லித்தியம் பேட்டரிகள் நீண்ட உபயோகத்திற்கு பின் ஐபோன்களை திடீரென ஸ்விட்ச் ஆஃப் ஆக வைக்கும் என தெரிவித்தது.

  ஐபோனின் பாகங்களுக்கு மின்சாரம் சீரற்ற முறையில் பாயும் போது ஐபோனின் மென்பொருள் சாதனத்தை ஸ்விட்ச் ஆஃப் ஆக வைக்கும் என அறிவித்திருந்தது. இவ்வாறு செய்யும் போது ஐபோனின் உதிரிபாகங்களில் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க முடியும்.  ஆப்பிளின் அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் ஐபோன் வேகத்தை ஆப்பிள் நிறுவனம் வேண்டுமென்றே குறைப்பதாக தகவல் பரவியது. இதுபோன்ற நடவடிக்கையில் ஆப்பிள் ஈடுபட்டதற்கு எவ்வித ஆதாரமும் வெளியாகவில்லை என்றாலும், சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் டிரென்ட் ஆனது.

  இதை தொடர்ந்து ஆப்பிள் வெளியிட்டுள்ள தகவல்களின் படி ஆப்பிள் சாதனங்களின் ஆயுளை குறைக்கும் நடவடிக்கைகளில் ஒருபோதும் ஈடுபட்டதில்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

  கலிஃபோர்னியா, நியூ யார்க் மற்றும் இலினியோஸ் உள்ளிட்ட நீதிமன்றங்களில் இதுவரை எட்டு வழக்குகள் ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா மட்டுமின்றி பிரான்ஸ் நாட்டிலும் ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
  Next Story
  ×