#TNAssemblyElection 2 வாரங்களில் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் த.வெ.க?

தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனு பெறப்பட்டுள்ளது. சேலம், வேலூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பை விஜய் நடத்தி உள்ளார்.
#TNAssemblyElection 2 வாரங்களில் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் த.வெ.க?
Published on

தமிழக சட்டசபை தேர்தல் தேதி அனேகமாக வருகிற 13-ந்தேதிக்குள் தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

முதல் முறையாக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் தமிழக வெற்றிக்கழகமும் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனு பெறப்பட்டுள்ளது. இதற்கிடையே சேலம், வேலூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பை விஜய் நடத்தி உள்ளார்.

இதனை தொடர்ந்து, தமிழக வெற்றிக்கழகம் சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு 2 வாரங்களில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் நேர்காணலை விரைவில் விஜய் தொடங்க உள்ளார். ஏற்கனவே தொகுதிக்கு 4 வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை விஜய் முடித்துள்ளதாக கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com