என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அரசு மருத்துவமனைக்குள் புகுந்து மனைவியை கொலை செய்த கணவருக்கு வலைவீச்சு
- தகராறின் போது விஸ்ரூத் தாக்கியதில் காயமடைந்த ஸ்ருதி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்துள்ளார்.
- மனைவியை கொலை செய்து விட்டு தலைமறைவான விஸ்ரூதை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனைவியை கத்தியால் குத்தி கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குளித்தலை அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த ஸ்ருதி(27)-யை அவரது கணவரான விஸ்ரூத் கத்தியால் 3 குத்தியதில் ஸ்ருதி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஏற்கனவே தகராறின் போது விஸ்ரூத் தாக்கியதில் காயமடைந்த ஸ்ருதி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்துள்ளார். இதனை தொடர்ந்து இன்று அதிகாலை அரசு மருத்துவமனைக்குள் புகுந்து மனைவியை கொலை செய்து விட்டு தலைமறைவான விஸ்ரூதை போலீசார் தேடி வருகின்றனர்.
அதிகாலையில் நடந்த இந்த கொலை சம்பவத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
Next Story






