என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விஜயின் மாநாட்டை விட அமித்ஷாவின் வருகை தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் - தமிழிசை
- அமித்ஷா வெற்றியை நிரூபித்து காண்பித்தவர்.
- விஜய் இன்னும் அரசியல் வெற்றியை நிரூபித்து காட்டவில்லை
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி பகுதியில் இன்று நடைபெறுகிறது.
அரசியல் திருப்பு முனையை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்புடன் மதுரை மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று பிற்பகல் முதலே தமிழகம் முழுவதிலும் இருந்து த.வெ.க. தொண்டர்கள் கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் மதுரை நோக்கி புறப்பட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், த.வெ.க. மாநாடு குறித்து பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை, "விஜயின் மாநாட்டை விட அமித்ஷாவின் வருகை தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அமித்ஷா வெற்றியை நிரூபித்து காண்பித்தவர். விஜய் சினிமா வெற்றியை நிரூபித்து காண்பித்தவர். ஆனால் விஜய் இன்னும் அரசியல் வெற்றியை நிரூபித்து காட்டவில்லை" என்று தெரிவித்தார்.
Next Story






