என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    என்றைக்கும் கை நம்மைவிட்டு போகாது: திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து சூசகமாக பேசிய உதயநிதி
    X

    என்றைக்கும் 'கை' நம்மைவிட்டு போகாது: திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து சூசகமாக பேசிய உதயநிதி

    • பாஜகவிற்கு புது அடிமைகள் நிச்சயம் கிடைப்பார்கள்.
    • திமுகவின் கடைசி தொண்டன் இருக்கும் வரை பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது.

    திண்டுக்கல் மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வந்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் பேசினார். பின்னர் தனியார் விடுதியில் நேற்று தங்கினார்.

    இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, "பாஜகவிற்கு புது அடிமைகள் நிச்சயம் கிடைப்பார்கள். ஆனால் எத்தனை அடிமைகள் ஒன்றுசேர்ந்து வந்தாலும், திமுக-வின் கடைசி தொண்டன் இருக்கும் வரை அவர்களால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது.

    உங்கள் எழுச்சி, அன்பை பார்க்கையில், முழுதாக மேடை ஏறுவோமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. என்றைக்கும் 'கை' நம்மைவிட்டு போகாது. நான் என் கையையும், உங்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கையையும் சொன்னேன்" என்று கூறினார்.

    கை' நம்மைவிட்டு போகாது என்று கூறியதன் மூலம் சூசகமாக திமுக - காங்கிரஸ் கூட்டணி பலத்தை துணை முதல்வர் உதயநிதி உறுதிசெய்தார்.

    Next Story
    ×