என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கேட்பதற்கு ஆள் இல்லை என மக்களுக்கான சலுகைகளை கேவலப்படுத்துகிறீர்களா?- விஜய்
- உங்களுக்கு நீங்க கொள்ளையடிச்சு வெச்சுருக்கிற காசுதான் துணை.
- இந்த விஜய் சலுகைகளுக்கு எதிரானவன் இல்லை.
ஈரோடு:
ஈரோடு விஜயமங்கலத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் தி.மு.க. மீது தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் சரமாரியாக குற்றம்சாட்டினார். அப்போது விஜய் பேசியதாவது:-
உங்களுக்கு நீங்க கொள்ளையடிச்சு வெச்சுருக்கிற காசுதான் துணை. எனக்கு, என்மேல எல்லையில்லா பாசம் வெச்சுருக்கிற இந்த Mass- தான் துணை.
சலுகைகளை இலவசம் என்பதில் உடன்பாடு இல்லை. ஓசியில் போவதாகக் கூறி மக்களை அவமானப்படுத்துகின்றனர். கேட்பதற்கு ஆள் இல்லை என மக்களுக்கான சலுகைகளை கேவலப்படுத்துகிறீர்களா? இந்த விஜய் சலுகைகளுக்கு எதிரானவன் இல்லை என்றார்.
இதனிடையே, பிரசார பொதுக்கூட்டத்தில் விஜய் பேசிக்கொண்டிருக்கும் போது ஸ்பீக்கர் கம்பம் மீது ஏறிய தொண்டரை தம்பி கீழ இறங்குப்பா... ப்ளீஸ்... நீ இறங்குனா தான் முத்தம் கொடுப்பேன் என்று அறிவுரை கூறினார்.
Next Story






