என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் பட்டியல் இன்று வெளியாகிறதா?
    X

    த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் பட்டியல் இன்று வெளியாகிறதா?

    • பதவிகளுக்கு பணம் கொடுத்தாலும், பணம் வாங்கினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
    • சில மாவட்டங்களில் மட்டும் இன்னும் மாவட்ட செயலாளர் யார் என்பது முடிவாகவில்லை

    தமிழக வெற்றிக் கழகத்தில் கட்சி பொறுப்புகளுக்கு பணம் வாங்குவதாகவும், விழுப்புரம் மாவட்டத்தில் நகர செயலாளர் பதவிக்கு ரூ.15 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.

    மேலும், பணம் இருந்தால்தான் த.வெ.க.வில் பதவி தரப்படுவதாக தொண்டர்கள், நிர்வாகிகள் பேசக்கூடிய ஆடியோக்கள் த.வெ.க. குழுக்களில் பகிரப்பட்டு வந்தது.

    இதையடுத்து பனையூரில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, தமிழக வெற்றிக் கழகத்தில் பதவிகளுக்கு பணம் கொடுத்தாலும், பணம் வாங்கினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

    இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் மாவட்ட செயலாளர்களின் முதல் பட்டியல் இன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

    பனையூரில், இன்று மாவட்ட பொறுப்பாளர்களை விஜய் சந்திக்க உள்ளதாகவும் அதன்பின் பட்டியல் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. சில மாவட்டங்களில் மட்டும் இன்னும் மாவட்ட செயலாளர் யார் என்பது முடிவாகவில்லை என்றும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட மாவட்ட செயலாளர்களின் பட்டியல் இன்று வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×