என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காங்கிரசாரிடம் எந்த கலக்கமும் இல்லை- விரைவில் முதல்வரை சந்திப்போம்..!- செல்வப்பெருந்தகை
- பிளவுபடுத்தியே பழக்கப்பட்ட பாஜகவினர் பிளவு என்று தான் பேசுவார்கள்.
- ஒரிசா, பீகார், மலேசியா என்று ஊருக்கு ஏற்ப பாஜகவினர் பேசுவார்கள்.
ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டில் ஒத்துவராது என முதலமைச்சர் அளித்த பேட்டி தொடர்பான கேள்விக்கு தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பதில் அளித்துள்ளார்.
முதல்வரின் கருத்தால் திமுக கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் பிரச்சனை ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு பார்வை உள்ளது, கட்சியின் தலைவர் என்ற முறையில் கருத்து கூறியுள்ளார் முதல்வர்.
திமுக- காங்கிரஸ் கூட்டணி வலுவாகவே இருக்கிறது. தமிழ்நாட்டில் என்ன நிலை என்பதை முதலமைச்சர் கூறியுள்ளார், இதனால், கூட்டணிக்குள் பிரச்சனை இருக்காது.
அகில இந்திய காங்கிரஸ் தலைமை கலந்து ஆலோசித்து முடிவெடுப்பார்கள். பிளவுபடுத்தியே பழக்கப்பட்ட பாஜகவினர் பிளவு என்று தான் பேசுவார்கள். ஒரிசா, பீகார், மலேசியா என்று ஊருக்கு ஏற்ப பாஜகவினர் பேசுவார்கள்.
காங்கிரசாரிடம் எந்த கலக்கமும் இல்லை, நாங்கள் இந்த மண்ணை நேசிப்பவர்கள், விரைவில் முதல்வரை சந்திப்போம்.
தொகுதி பங்கீடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வெகு விரைவில் சந்திப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணிக்கம் தாகூர் தொடர்பான கேள்விக்கு எங்களுக்குள் உள்ள பிரச்சனையை நாங்கள் பேசி தீர்வு காண்போம் என பதில் அளித்தார்.






