என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழக சட்டசபையில் "சீர்காழி மாப்பிள்ளை" என்று அழைத்த எம்எல்ஏ- புன்னகைத்த மு.க.ஸ்டாலின்
- சீர்காழியில் ஒரு தொழிற்பயிற்சி மையமாவது அமைத்து தர வேண்டும்.
- சீர்காழியில் புதிய தொழிற்பயிற்சி மையம் அமைக்கப்படும் என அமைச்சர் சி.வி.கணேசன் உறுதி அளித்தார்.
தமிழக சட்டசபையில் இன்று சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் தனது தொகுதி முன்னேற்றத்திற்காக கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.
அப்போது அவர், " சீர்காழி இன்னும் வளர்ச்சி பெறாத தொகுதி. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், முதல்வர் ஸ்டாலினே சீர்காழி மாப்பிள்ளை தான்.
அதேபோல், வேளாண்துறை அமைச்சர் அவர்களும் சீர்காழி தொகுதி மாப்பிள்ளை, போக்குவரத்துத்துறை அமைச்சரும் சீர்காழி தொகுதியின் மாப்பிள்ளை.
இவ்வளவு பேர் இருந்தும் சீர்காழி தொகுதியில் ஒரு தொழிற்பயிற்சி மையம் கூட கிடைக்கவில்லை என்றால் மக்கள் என்ன சொல்வார்கள்.
அதனால், அமைச்சர் இதுதொடர்பாக மறுபரிசீலனை செய்து ஒரு தொழிற்பயிற்சி மையமாவது அமைத்து தர வேண்டும்" என்று கூறினார்.
இதற்கிடையே, சீர்காழி மாப்பிள்ளை என்று சீர்காழி எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் சொன்னதும் முதல்வர் ஸ்டாலின் புன்னகைத்தார்.
இறுதியில் சீர்காழியில் புதிய தொழிற்பயிற்சி மையம் அமைக்கப்படும் என அமைச்சர் சி.வி.கணேசன் உறுதி அளித்தார்.






