என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இன்று Get Out சொல்றவங்க மீண்டும் Cut Out-க்கு போயிடுவாங்க - விஜயை நேரடியாக விமர்சித்த தமிழிசை சவுந்தரராஜன்
- பா.ஜ.க. பல மாநிலங்களில் ஆட்சி செய்கிறது.
- அரசியலில் முக்கியத்துவம் பெறவில்லை எனில் அவர் தானாகவே நடிக்க சென்றுவிடுவார்.
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன் தனது பாணியில் விஜயை கடுமையாக விமர்சித்தார். அவர் கூறியதாவது:-
கட் அவுட் மட்டும் வைத்து நடித்துக்கொண்டிருந்தவர்கள் இன்று கெட் அவுட் என்று சொல்கிறார்கள். தி.மு.க.வை அவர் கெட்அவுட் என்று சொல்லலாம். ஏன் என்றால் அவரது கட்சி தமிழ்நாட்டில் மட்டும் தான் உள்ளது. தமிழ்நாட்டில் அவர் கெட் அவுட்-ன்னு தி.மு.க.வை சொல்லலாம். பா.ஜ.க. பல மாநிலங்களில் ஆட்சி செய்கிறது. மத்தியில் அரசு செய்கிறது. அதை எப்படி கெட் அவுட்-ன்னு சொல்ல முடியும். அதனால விஜய் கெட் அவுட்-ன்னு சொல்றது தி.மு.க.வைதான்.
கட் அவுட் வைத்துக்கொண்டு தமிழக மக்களை பற்றி கவலைகொள்ளாமல் சினிமாவில் மட்டுமே நடித்துக்கொண்டிருந்தவர்கள் கட் அவுட் இன்றைக்கு கெட் அவுட் என்று சொல்கிறது. மக்கள் அவர்களை கெட்அவுட் என்று சொல்லிவிட்டு நீங்கள் கட் அவுட் மட்டும் வைத்துக்கொள்ளுங்கள் கெட் அவுட்-க்கு எல்லாம் நீங்கள் வரவேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள். அரசியலில் முக்கியத்துவம் பெறவில்லை எனில் அவர் தானாகவே நடிக்க சென்றுவிடுவார் என்றார்.






