என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மக்கள் பணியாற்றும் தலைவராக அன்று புரட்சி தலைவர், இன்று  புரட்சி தளபதி - செங்கோட்டையன்
    X

    மக்கள் பணியாற்றும் தலைவராக அன்று புரட்சி தலைவர், இன்று புரட்சி தளபதி - செங்கோட்டையன்

    • தலைவரை பொறுத்தவரையில் மனிதநேயம் மிக்கவர்.
    • உங்களுக்காக வாழ்ந்து கொண்டு இருப்பவர் என்பதை மறந்து விடக்கூடாது.

    ஈரோடு:

    ஈரோட்டில் விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்ற த.வெ.க. தலைவர் விஜய், அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக கூட்டம் நடைபெறும் விஜயமங்கலத்திற்கு வந்தடைந்தார்.

    இக்கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் செங்கோட்டையன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    வரலாற்றை படைப்பதற்கு இங்கு பெருந்திரளாக வந்திருக்கிறீர்கள். அதோடு மட்டுமல்ல சில பேர் நினைக்கிறார்கள்.

    தலைவரை பொறுத்தவரையில் மனிதநேயம் மிக்கவர். நல்லவர். வல்லவர்.

    உங்களுக்காக வாழ்ந்து கொண்டு இருப்பவர் என்பதை மறந்து விடக்கூடாது. ஏன் என்று சொன்னால் ஒரு ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வருவாய், அதை தேவையில்லை என்று விட்டுவிட்டு மக்களுக்கு பணியாற்ற ஒரு தலைவர் வந்திருக்கிறார் என்று சொன்னால் உலக வரலாற்றில் புரட்சி தலைவரை பார்த்தேன். இன்றைக்கு புரட்சி தளபதியை காண்கிறேன். ஆகவே தான் மக்கள் இங்கு திரண்டு இருக்கிறார்கள்.

    என்னை பொறுத்தவரையிலும் இது தீர்ப்பு அளிக்கிற கூட்டம். இது தீர்ப்பு அளிக்கிற கூட்டம் மட்டும் இல்ல. நீங்கள் திரண்டு வந்தால் நாடே தாங்காது என்கிற முறையில் தான் இங்கே ஆர்ப்பரித்து கொண்டு இருக்கிறீர்கள்.

    உங்களை பொறுத்தவரையிலும் எதிர்காலம் பிரகாசம் உள்ள எதிர்காலமாக மாறப்போகிறது. நாளை தமிழகத்தை ஆள போவது தளபதி தான் என்று பேசினார்.

    Next Story
    ×