என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    காங்கிரசுக்கு மாநிலங்களவை சீட் கொடுப்பதாக முதலமைச்சர்  உறுதி -  செல்வப்பெருந்தகை
    X

    காங்கிரசுக்கு மாநிலங்களவை சீட் கொடுப்பதாக முதலமைச்சர் உறுதி - செல்வப்பெருந்தகை

    • தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி இயற்கையாக அமைந்த கூட்டணி, உறுதியான கூட்டணி.
    • கூட்டணி பேச்சுவார்த்தை வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.

    சென்னை அறிவாலயத்தில் தி.மு.க. - காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. தி.மு.க. உடனான பேச்சுவார்த்தைக்கு பின் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி இயற்கையாக அமைந்த கூட்டணி, உறுதியான கூட்டணி.

    * தி.மு.க.வுடன் மட்டும் தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    * தி.மு.க. தவிர வேறு யாருடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

    * காங்கிரசுக்கு ஒரு மாநிலங்களவை சீட் கொடுப்பதாக முதலமைச்சர் கூறி உள்ளார்.

    * தி.மு.க.வுடன் காங்கிரஸ் நடத்திய முதற்கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.

    * கூட்டணி பேச்சுவார்த்தை வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×