என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நான் எம்.எல்.ஏ.வாக தொடர்வது அமைச்சர் துரைமுருகன் கையில் தான் உள்ளது - செல்வப்பெருந்தகை
- செல்வப்பெருந்தகை என்னிடம் வசமாக சிக்கிக்கொண்டார்.
- வரதராஜபுரம் பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க தேவையான நடவடிக்கை அரசு எடுக்கும்.
தமிழக சட்டசபையின் 2-ம் நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டசபையில் கேள்வி நேரம் தொடங்கியது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை கூறுகையில்,
வரதராஜபுரம் பகுதியில் மழை வெள்ளத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் இல்லையெனில் நான் எம்எல்ஏவாக தொடர முடியாது.
நான் எம்.எல்.ஏ.வாக தொடர்வது அமைச்சர் துரைமுருகன் கையில் தான் உள்ளது என்று கூறினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், செல்வப்பெருந்தகை என்னிடம் வசமாக சிக்கிக்கொண்டார். இனி அவர் எம்.எல்.ஏ.வாக ஆகுவது என் கையில் தான் உள்ளது.
வரதராஜபுரம் பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க தேவையான நடவடிக்கை அரசு எடுக்கும் என்று அவர் கூறினார்.
Next Story






