என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஒழிக என கோஷமிட்ட த.வெ.க. தொண்டர்கள்: நாட்ல இவ்ளோ பேரு வேலை இல்லாம இருக்காங்க - சீமான்
    X

    ஒழிக என கோஷமிட்ட த.வெ.க. தொண்டர்கள்: நாட்ல இவ்ளோ பேரு வேலை இல்லாம இருக்காங்க - சீமான்

    • அண்ணா படத்தை வைத்துக்கொண்டு தி.மு.க ஒழிக்க வேண்டும் என விஜய் பேசுவதாக சீமான் விமர்சனம்
    • த.வெ.க. மாநாட்டு திடலில் சீமான் ஒழிக என தவெக தொண்டர்கள் கோஷமிட்டனர்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி பகுதியில் இன்று நடைபெறுகிறது.

    அரசியல் திருப்பு முனையை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்புடன் மதுரை மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று பிற்பகல் முதலே தமிழகம் முழுவதிலும் இருந்து த.வெ.க. தொண்டர்கள் கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் மதுரை நோக்கி புறப்பட்டு வரத்தொடங்கினர்.

    த.வெ.க. மாநாட்டு திடலில் சீமான் ஒழிக என தவெக தொண்டர்கள் கோஷமிட்டனர். அண்மையில் தவெக கட்சியையும் தொண்டர்களையும் சீமான் கடுமையாக தாக்கி விமர்சித்த நிலையில் அவருக்கு எதிராக தொண்டர்கள் கோஷமிட்டthu paraparappai erpaduthiyathu.

    த.வெ.க. மாநாட்டு திடலில் சீமான் ஒழிக என்று தொண்டர்கள் கூறியது தொடர்பாக சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "த.வெ.க. தொண்டர்கள் கூறியதை மகிழ்ச்சியாக எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

    மேலும், த.வெ.க. தொண்டர்கள் முன்கூட்டியே மாநாட்டுக்கு வந்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த சீமான், "நாட்ல இவ்ளோ பேரு வேல இல்லாம இருக்காங்க..." என்று கிண்டலாக பதில் அளித்தார்.

    Next Story
    ×