என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்று திரள வேண்டும்- சீமான்
    X

    வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்று திரள வேண்டும்- சீமான்

    • நாம் தமிழர் கட்சி மாபெரும் மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுக்கும்.
    • ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பா.ஜ.க. மக்களாட்சியை குழிதோண்டி புதைக்கிறது.

    இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சிறப்புத் திருத்தம் என்ற பெயரிலான புதிய நடைமுறையின் மூலம், வடமாநிலத்தவரைத் தமிழ்நாட்டு வாக்காளர்களாக மாற்றுவது தமிழர்களின் இன உரிமைப் பறிப்பு ஆகும். இந்த நடவடிக்கையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சீமான் கூறியதாவது:

    * வடமாநிலத்தவர் வருகையை ஆதரித்த பெருமக்கள் இப்போது என்ன பதில் கூறப்போகிறார்கள்.

    * வாக்காளர் அட்டை என்பது தமிழ்நாட்டின் அரசதிகாரத்தை தீர்மானிக்கும் உரிமை சாசனமாகும்.

    * ஆட்சி அதிகாரத்தை கைப்பட்ட பா.ஜ.க. மக்களாட்சியை குழிதோண்டி புதைக்கிறது.

    * மக்களிடம் அதிகாரப் பகைமையை மூட்டி நாட்டின் ஒற்றுமையை சிதைக்க வழிவகுக்கும்.

    * வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்று திரள வேண்டும்.

    * நாம் தமிழர் கட்சி மாபெரும் மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுக்கும்.

    * வாக்காளர் சிறப்பு திருத்தமானது தேர்தல் நடைமுறையையே வெற்றுசடங்காக மாற்றும் எதேச்சதிகாரம்.

    * வடமாநிலத்தவரை தமிழ்நாட்டு வாக்காளராக்கும் இன உரிமை பறிப்பை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×