என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் - சட்டசபையில் முதலமைச்சர் கண்டனம்
- ஜம்முவில் மோசமான சூழ்நிலை நிலவுவதற்கு இது எடுத்துக்காட்டு.
- பயங்கரவாத அமைப்புகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப்பயணிகள் பலியானதாக வந்த செய்தி பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
* தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஜம்முவில் மோசமான சூழ்நிலை நிலவுவதற்கு இது எடுத்துக்காட்டு.
* தாக்குதலில் தமிழர்கள் சிலர் பாதிக்கப்பட்டதாக தகவல் வந்த உடனேயே அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்ய உத்தரவிட்டேன்.
* காஷ்மீர் அரசுடன் இணைந்து பணியாற்றி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய உதவி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன்.
* அப்பாவி மக்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய ஜனநாயகத்தில் இடமில்லை.
* பயங்கரவாத அமைப்புகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
* பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து மாநிலம் திரும்ப நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.
* காஷ்மீருக்கு சென்று பணிகளை மேற்கொள்ள புதுக்கோட்டை கூடுதல் ஆட்சியர் அப்தாம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு சட்டசபையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதையடுத்து சட்டசபை உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.






