என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நினைவு நாள்: ஜெயலலிதா நினைவிடத்தில் இபிஎஸ் மரியாதை- அதிமுகவினர் உறுதிமொழி ஏற்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    நினைவு நாள்: ஜெயலலிதா நினைவிடத்தில் இபிஎஸ் மரியாதை- அதிமுகவினர் உறுதிமொழி ஏற்பு

    • அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
    • எடப்பாடி பழனிசாமி உறுதிமொழி வாசிக்க அதை அனைவரும் திரும்ப வாசித்து உறுதிமொழி ஏற்றனர்.

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சி தொண்டர்கள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகளும் திரண்டு வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

    இதனையடுத்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிட நுழைவாயில் உட்புறத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    எடப்பாடி பழனிசாமி உறுதிமொழி வாசிக்க அதை அனைவரும் திரும்ப வாசித்து உறுதிமொழி ஏற்றனர்.

    Next Story
    ×