என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வாய்ப்புள்ளதா? - அமித் ஷா விளக்கம்
    X

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வாய்ப்புள்ளதா? - அமித் ஷா விளக்கம்

    • பாஜகவிடம் ஒருபோதும் கூட்டணி அமைக்கமாட்டோம் என்று விஜய் அறிவித்துள்ளார்
    • நாங்கள் பல கட்சிகளை ஒரே கூட்டணியில் கொண்டு வர முயற்சிக்கிறோம் என்று அமித் ஷா தெரிவித்தார்.

    தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த அமித் ஷாவிடம், உங்கள் கூட்டணியில் த.வெ.க. தலைவர் விஜய் வர வாய்ப்புள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த அமித் ஷா, "நாங்கள் பல கட்சிகளை ஒரே கூட்டணியில் கொண்டு வர முயற்சிக்கிறோம்" என்று பதில் அளித்தார்.

    அதே சமயம் பாஜகவிடம் ஒருபோதும் கூட்டணி அமைக்கமாட்டோம் என்று விஜய் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×