என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை- நயினார் நாகேந்திரன்
    X

    யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை- நயினார் நாகேந்திரன்

    • திமுக கூட்டணியில் தான் பிளவு இருக்கிறதே தவிர தேசிய ஜனநாயக கூட்டணியில் பிளவு இல்லை.
    • திமுக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என தினந்தோறும் மாணிக்கம் தாகூர் பேட்டி அளித்து வருகிறார்.

    த.வெ.க தலைவர் விஜயை அநாகரிகமாக விமர்சித்தது தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார்.

    மதுரையில் என்டிஏ பொதுக்கூட்டத்திற்கு பந்தல்கால் நடப்பட்ட பிறகு நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. நான் யார் மனதும் புண்படக்கூடாது என நினைப்பவன்.

    திமுக கூட்டணியில் தான் பிளவு இருக்கிறதே தவிர தேசிய ஜனநாயக கூட்டணியில் பிளவு இல்லை.

    திமுக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என தினந்தோறும் மாணிக்கம் தாகூர் பேட்டி கொடுத்து வருகிறார்.

    திமுக கூட்டணி தான் வலுவாக இல்லை. எங்கள் அண்ணன் இபிஎஸ் மற்றும் பல கூட்டணி கட்சிகளால் பாஜக பலமாக உள்ளது.

    இபிஎஸ் தலைமையில் நல்லாட்சி மலரும். முதலில் விஜய் கட்சிக்கு கொள்கை இருக்கிறதா? அப்படி இருந்தால் அந்த கொள்கைகளை தெளிவாக காட்டட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×