என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அதிமுக, பாஜக இடையே இணைப்பு இருக்கிறது, ஆனால் பிணைப்பு இல்லை- திருமாவளவன்
    X

    அதிமுக, பாஜக இடையே இணைப்பு இருக்கிறது, ஆனால் பிணைப்பு இல்லை- திருமாவளவன்

    • தனிப்பெரும் கட்சியாக அதிமுக ஆட்சியமைக்கும் என்று இபிஎஸ் தெரிவித்தார்.
    • தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித் ஷா கூறியிருந்தார்.

    கள்ளக்குறிச்சி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக அதிமுக ஆட்சியமைக்கும். வாக்குகள் சிதறாமல் இருக்க, திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றவே கூட்டணி வைத்துள்ளோம்" என்று தெரிவித்தார்.

    தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித் ஷா கூறியிருந்த நிலையில், தனித்து ஆட்சி அமைப்போம் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என இபிஎஸ் கூறியது பாஜகவுக்கான பதில்தான். கூட்டணி ஆட்சி இங்கு இல்லை. அதிமுக அதற்கு உடன்படாது என்ற கருத்தையே அவரது பேச்சின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது" என்று தெரிவித்தார்.

    மேலும் பேசிய அவர், "கஸ்டடி டெத் என்பது நிகழக் கூடாது. அதை அடுத்தடுத்து சம்பவங்கள் நிகழ்கிறபோது, சுட்டியும் காட்டுகிறோம். ஆனால் இது தொடர்கதையாக நீடிப்பது கவலை அளிக்கிறது" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×