என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு தருமபுரி பிரச்சாரத்தில் மௌன அஞ்சலி செலுத்திய இபிஎஸ்
- விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்
- தர்மபுரி நகராட்சி அலுவலகம் அருகில் இபிஎஸ் மக்களிடையே உரையாற்றினார்.
கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில், 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இன்று தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதலில் தர்மபுரி நகராட்சி அலுவலகம் அருகில் கூடியிருந்த பெருந்திரளான மக்களிடையே எழுச்சியுரை நிகழ்த்தினார்.
"செப்டம்பர் 27ம் தேதி கரூரில் தவெக கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிர் இழந்திருக்கிறார்கள். அவர்களுக்காக 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள்" என்றதும் அனைவரும் அமைதி காத்து மவுன அஞ்சலி செலுத்தினர்.
Next Story






