என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மக்களுக்கு பாதுகாப்பு வழங்க தி.மு.க. அரசு தவறிவிட்டது- எடப்பாடி பழனிசாமி
    X

    மக்களுக்கு பாதுகாப்பு வழங்க தி.மு.க. அரசு தவறிவிட்டது- எடப்பாடி பழனிசாமி

    • அரக்கோணத்தில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
    • தி.மு.க. நிர்வாகி தெய்வசெயல் மீது சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * 3 ஆண்டுகள் தொடர்ந்து நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தவர் முதலமைச்சர். 3 ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தால் நிதியை பெற்றிருக்கலாம்.

    * அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்றுள்ளார்.

    * எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது பிரதமருக்கு கருப்பு பலூன் விட்டு எதிர்ப்பு தெரிவித்தார்.

    * ஆட்சிக்கு வந்தபிறகு வெள்ளைக்குடை பிடித்து சென்று பிரதமருக்கு வரவேற்பு அளித்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    * எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடு, ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு.

    * தமிழகத்தில் பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெற்றிருக்கிறது. அதனால் அமலாக்கத்துறை சோதனையும் நடைபெற்றது.

    * தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து கொண்டிருக்கிறது.

    * மக்களுக்கு பாதுகாப்பு வழங்க தி.மு.க. அரசு தவறிவிட்டது.

    * அரக்கோணத்தில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    * தி.மு.க. நிர்வாகி தெய்வசெயல் மீது சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    * குற்றவாளிகள் முன்ஜாமின் பெற காவல்துறையை துணை புரிகிறது.

    * மோசமான ஆட்சி நடந்து கொண்டிருப்பதற்கு அரக்கோணமே சாட்சி என்றார்.

    Next Story
    ×