என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தை விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை - சி.வி.சண்முகம்
- அங்கீகரிக்கப்பட்ட கட்சி, அமைப்பின் உட்கட்சி விவகாரங்களில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி இல்லை.
- அ.தி.மு.க. தங்களுடையது என யாரும் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கவில்லை.
அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்ட நிலையில் சி.வி.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அ.தி.மு.க. உறுப்பினர் என்ற போர்வையில் சிலர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
* தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட சூரியமூர்த்தி அ.தி.மு.க. உறுப்பினர் அல்ல என நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
* இல்லாத அதிகாரம் இருப்பதாகக்கூறி தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
* அங்கீகரிக்கப்பட்ட கட்சி, அமைப்பின் உட்கட்சி விவகாரங்களில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி இல்லை.
* அங்கீகரிக்கப்பட்ட கட்சியில் பிரச்சனை இருந்தால் அதனை தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே விதி
* உட்கட்சியில் பிரச்சனை இருந்தால் அதில் தலையிட நீதிமன்றங்களக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.
* கட்சி விதி திருத்தங்களை பதிவு செய்வது மட்டுமே தேர்தல் ஆணையத்தின் வேலை.
* அ.தி.மு.க. உறுப்பினர் என்ற போர்வையில் சிலர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
* கட்சி விதி திருத்தங்கள் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரமில்லை.
* மூல வழக்கில் வரும் தீர்ப்பை செயல்படுத்துவோம் என ஆணையமும் கூறி உள்ளது.
* விதிகள் திருத்தம் மாற்றங்கள் குறித்த தகவல் தெரிவிக்க மட்டுமே செய்ய வேண்டும்.
* ஓபிஎஸ்-ஆல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் தான் புகழேந்தி.
* கட்சி எங்களுடையது என மனு அளித்தால் அதனை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம்.
* அ.தி.மு.க. தங்களுடையது என யாரும் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கவில்லை.
* தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட சூரியமூர்த்தி அ.தி.மு.க. உறுப்பினர் அல்ல என நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
* கட்சியில் இல்லாதவர்கள், துரோகிகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்கக்கூடாது என அ.தி.மு.க. வாதிட்டது.
* உட்கட்சி விவகாரங்களை விசாரிக்க அதிகாரமில்லை என முன்னதாக தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளது.
* அ.தி.மு.க.வின் கோரிக்கைகளை வாதங்களை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
* அதிகாரம் இருக்கிறதா? இல்லையா? என்பதை முடிவு செய்த பின்னரே தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






