என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் உள்ள தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப நடவடிக்கை - முதலமைச்சர்
- ஜம்மு காஷ்மீரில் கல்வி பயில சென்றுள்ள தமிழக மாணவர்கள் வெளிநாடு வாழ் தமிழர் நலவாரியத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- நிலைமை சீரடைந்தவுடன் மாணவர்கள் பாதுகாப்பாகவும் விரைவாகவும் அழைத்து வரப்படுவார்கள் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத நிலைகளை குறிவைத்து இந்திய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தின.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து எல்லை பகுதிகளில் இருநாடுகளும் வான்வெளி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் அப்பகுதியில் பதற்றமாக சூழ்நிலை நிலவி வருகிறது. பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக தமிழ்நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் கல்வி பயில சென்றுள்ள தமிழக மாணவர்கள் வெளிநாடு வாழ் தமிழர் நலவாரியத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு பவனும் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருவதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
நிலைமை சீரடைந்தவுடன் மாணவர்கள் பாதுகாப்பாகவும் விரைவாகவும் அழைத்து வரப்படுவார்கள் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
காஷ்மீரின் பேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் உள்ள தமிழக மாணவர்கள் தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. உதவி தேவைப்படும் மாணவர்கள் 9994433456, 7373026456 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.
உதவி தேவைப்படும் தமிழக மாணவர்கள் nrtwb.chairman@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு தொடர்பு கொள்ளலாம்.






