என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பாஜகவிற்கு சம்மட்டி அடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார் - கனிமொழி!
    X

    'பாஜகவிற்கு சம்மட்டி அடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார்' - கனிமொழி!

    • திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியது என்று 1.30 கோடி மகளிர் சொல்வார்கள்.
    • கோவை பெண் வழக்கில் 30 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திமுக மகளிரணி சார்பில் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' மாநாடு நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, திமுக அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் பேசிய அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி,

    பெண்களுக்கான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொல்லும் மாநாடுதான் இந்த மாநாடு. நீதி, சமத்துவம், சகோதரத்துவத்தை காக்கக்கூடிய ஒரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். தமிழ்நாட்டை அல்ல நாட்டை காக்கக்கூடிய பொறுப்பு முதலமைச்சர் கையில் உள்ளது.

    திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றியது என்று 1.30 கோடி மகளிர் சொல்வார்கள். இந்தியாவிலேயே வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகமாக உள்ள மாநிலம் தமிழ்நாடுதான். அதற்கான காரணம் நமக்கான கல்வி இங்கு வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் புதிதாகத் தொடங்கி உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 56% பெண்களால் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் உயர்கல்விக்கு செல்லும் பெண்களின் சதவீதம் 48%. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் இது அதிகம்.

    ஆனால் எதிர்க்கட்சிகள் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத மாநிலம் தமிழ்நாடு என கூறிக்கொண்டிருக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பொள்ளாட்சி கொடூரம் நம் அனைவருக்கும் தெரியும். அந்த பெண்களுக்கு நீதி கிடைத்தது நம் ஆட்சியில். உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியின் ஜாமினை எதிர்த்து போராடும் பெண் நடுத்தெருவிற்கு இழுத்து வரப்படுகிறார். இதுதான் பாஜக பெண்களுக்கு வழங்கும் பாதுகாப்பு. ஆனால் கோவை பெண் வழக்கில் 30 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதுதான் திமுகவிற்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இருக்கும் வித்தியாசம்.

    நாம் உண்மையில் பெண்களின் எதிர்காலம், பாதுகாப்பு குறித்து கவலைப்படக் கூடியவர்கள். நூறுநாள் வேலைத் திட்டத்திற்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் இயக்கம் திமுக மட்டும்தான். இது தமிழ்நாட்டை மட்டுமல்ல, நாடு முழுவதையும் பாதிக்கக்கூடியது. நாட்டில் மதக்கலவரத்தை, வெறுப்பை, காழ்ப்புணர்ச்சியை உருவாக்கி அரசியல் செய்துவிடலாம் என துடித்துக் கொண்டிருக்கக்கூடிய பாஜகவிற்கு சம்மட்டி அடியாக இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னால் அணி திரள்வோம், அணி திரள்வோம், அணி திரள்வோம்'" எனப் பேசினார்.

    Next Story
    ×