என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஞானசேகரன் மீதான 2-வது FIR என்ன ஆனது? - முதலமைச்சரும், காவல்துறையும் பதிலளிக்க வேண்டும் என்கிறார் அண்ணாமலை
- அதிகாரிக்கும் ஞானசேகரனுக்கும் என்ன தொடர்பு?
- இந்த ஒரு வழக்கு மட்டும்தானா இன்னும் பல வழக்குகளா?
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக முன்னாள் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-
ஞானசேகரனின் தொலைபேசி எண்ணானது 90429 77907. அரசு வழக்கறிஞர் சொல்கிறார் சம்பவத்தன்று ஞானசேகரனின் மொபைல் இரவு 8.52 மணி வரை பிளைட் மோடில் இருந்தது என்று. உண்மைதான். CDR -ம் அதை தான் சொல்கிறது. நான் இன்றைக்கு தொடரும் கேள்வி திமுக அரசு குறிப்பாக முதலமைச்சர் கிட்ட கேட்கணும். முதலமைச்சர் வீட்டில் பெண் குழந்தைகள் இருக்கிறார். அவர் இன்றைக்கு நேரடியாக பதில் சொல்ல வேண்டிய கடமை கட்டாயம் இருக்கு.
8.52 மணிக்கு பிறகு 8.55 மணிக்கு ஒரு காவல்துறை அதிகாரிக்கு தான் முதல் போன் காலை ஞானசேகரன் செய்கிறார். காவல்துறை மீது நான் பெரும் மதிப்பு வைத்துள்ளேன் என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் அந்த காவல்துறை அதிகாரியின் பெயரையும், பதவியையும், அவரது மொபைல் நம்பரையும் நான் வெளியிடவில்லை. 48 மணிநேரம் கழித்து அரசு என்ன சொல்றாங்க பார்த்துவிட்டு வெளியிடுகிறேன்.
8.55 மணிக்கு காவல்துறை அதிகாரிக்கு செய்த முதல் போன்கால் எதற்காக? அந்த காவல்துறை அதிகாரி 6 நிமிடங்கள் கழித்து 9.01-க்கு திரும்ப ஞானசேகரனை அந்த அதிகாரி அழைக்கிறார்? எதற்காக? விசாரித்தீர்களா? காவல்துறை அதிகாரிக்கு ஞானசேகரன் என்ன ரிப்போட் பண்றான்னு குற்றம் செய்த பிறகு. அதை chargesheet-ல் கொண்டு வந்தீங்களா? அதிகாரிக்கும் ஞானசேகரனுக்கும் என்ன தொடர்பு? இதை ஏன் நான் திரும்ப திரும்ப கேட்கிறேன் என்றால் மே 16-ந்தேதி ஞானசேகரன் மீது சி.பி.சி.ஐ.டி போலீசார் 2-வது FIR பதிவு செய்கிறார்கள். டிச.23-ந்தேதி முதல் FIR. இதுபோன்று இன்னும் பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா? இந்த ஒரு வழக்கு மட்டும்தானா இன்னும் பல வழக்குகளா?
அரசு என்ன பண்ணுது மே 16-ந்தேதி பதிவு பண்ண 2-வது FIR-ஐ ரகசியமாக வைத்துள்ளது. நமக்கு சொல்லலை. பாலியல் வன்கொடுமை மற்றும் ஒரு வழக்கு ஞானசேகரன் மீது மே16-ந்தேதி சிபிசிஐடி பதிவு செய்கிறது. அது என்ன நிலைமையில் இருக்கிறது தெரியாது? அதைதான் கேட்கிறேன் என்றார்.






