என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கருப்பு பட்டை  அணிந்து வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் - சபாநாயகர், அமைச்சர் ரகுபதி கிண்டல்
    X

    கருப்பு பட்டை அணிந்து வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் - சபாநாயகர், அமைச்சர் ரகுபதி கிண்டல்

    • கரூர் கூட்ட நெரிசல், கிட்னி திருட்டு விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கைகளில் கருப்பு பட்டை அணிந்து வந்தனர்.
    • அனைவருக்கும் ஒன்றாக பி.பி. அதிகமாகி விட்டதோ என்று நினைத்தேன் என்று கூறினார்.

    தமிழக சட்டசபையின் 2-வது நாள் அமர்வு சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று தொடங்கியது.

    சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைகளில் கருப்பு பட்டையை அணிந்து வந்தனர். கரூர் கூட்ட நெரிசல், கிட்னி திருட்டு விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கைகளில் கருப்பு பட்டை அணிந்து வந்தனர்.

    இந்நிலையில் கைகளில் கருப்பு பட்டை அணிந்து வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் அப்பாவு கிண்டலடித்தார்.

    இதுதொடர்பாக அவர், அனைவருக்கும் ஒன்றாக பி.பி. அதிகமாகி விட்டதோ என்று நினைத்தேன் என்று கூறினார்.

    சிறையில் அடையாள பட்டை அணிந்திருப்பது போல் அ.தி.மு.க.வினர் வந்துள்ளனர் என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

    அ.தி.மு.க.வினர் குறித்த சபாநாயகர், அமைச்சர் ரகுபதியின் கிண்டலால் சட்டசபையில் சிரிப்பலை உண்டானது.

    Next Story
    ×