என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மாணவி வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம்- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் 500 பேர் கைது
    X

    மாணவி வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம்- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் 500 பேர் கைது

    • போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் சாலையில் அமர்ந்து அ.தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர்.
    • கிண்டி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவத்தை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று போராட்டம் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தின் எதிரே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் சாலையில் அமர்ந்து அ.தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் போலீசாருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் இச்சம்பவத்தால் கிண்டி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கோகுல இந்திரா உள்பட அதிமுகவினர் 500 பேரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×