என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மின்துறையில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று வருகிறது- அன்புமணி ராமதாஸ்
- திருப்போரூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு நடைபயணத்தை தொடங்கினார்.
- 4வது நாளாக சென்னை மதுரவாயலில் உரிமை மீட்க தலைமுறை காக்க நடைபயணத்தை மேற்கொண்டார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 'உரிமை மீட்க தலைமுறை காக்க' என்ற தலைப்பில் கடந்த 25ம் தேதி தொடங்கி நவம்பர் 1ம் தேதி வரை 100 நாட்கள் நடைபயணம் செல்கிறார்.
முதல் நாள் அன்று திருப்போரூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு நடைபயணத்தை தொடங்கினார்.
சமூகநீதி, பெண்களுக்கான உரிமை, விவசாயம், வேலை வாய்ப்பு, நல்லாட்சி, கல்வி உரிமை, உணவு, வளர்ச்சி மற்றும் அடிப்படை சேவைகள் என 10 உரிமைகளை மீட்கும் நோக்கில் அன்புமணி பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், அன்புமணி இன்று 4வது நாளாக சென்னை மதுரவாயலில் உரிமை மீட்க தலைமுறை காக்க நடைபயணத்தை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மின்சாரத்துறையில் மிகப்பெரிய ஊழல் நடைபெறுகிறது என பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக திமுகவினர் பொய் சொல்கிறார்கள். 541 வாக்குறுதியில் 60 வாக்குறுதிகளை மட்டுமே திமுக நிறைவேற்றி உள்ளது.
மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யப்படும் என கூறினார்கள். அதையும் செய்யவில்லை. மின்துறையில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்ற வருகிறது.
இவ்வாறு குறிப்பிட்டார்.






