என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

'கூட்டணிக்கு கொள்கை அவசியமில்லை' - டிடிவி தினகரன்!
- கூட்டணி என்பது யார் ஆட்சிக்கு வரவேண்டும், யார் வரக்கூடாது என்பதை தீர்மானிப்பதற்காகத்தான்.
- அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பமும்தான்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருச்சியில் என்டிஏ பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வருகைத் தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,
விஜய் என்டிஏ கூட்டணியில் இணைகிறாரா? என்ற கேள்விக்கு,
எந்த ஒரு கூட்டணியும் பலப்படுவது சிறப்பாக இருக்கும் என்றுதான் நான் சொல்ல முடியும். கட்சிகள் வந்து பலப்படுவது ஒரு சிறப்பான விஷயம். ஏன்.டி.ஏ கூட்டணி பலப்படுவது தமிழ்நாட்டிற்கு நல்லது. மற்ற முடிவுகளை இபிஎஸ்-ம், டெல்லி தலைவர்களும் பார்த்துக் கொள்வார்கள்' என தெரிவித்தார்.
பாஜகவை எதிர்க்கும் விஜய், கூட்டணிக்கு வருவாரா? என்ற கேள்விக்கு,
கூட்டணி என்பது யார் ஆட்சிக்கு வரவேண்டும், யார் வரக்கூடாது என்பதை தீர்மானிப்பதற்காகத்தான். ஒரே கொள்கையை கொண்டவர்கள்தான் கூட்டணியில் இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. காங்கிரஸ் - கம்யூனிஸ்டு ஒரேக் கூட்டணியில் இல்லையா. அதுபோலத்தான். என்றார்.
இபிஎஸ் குறித்த கேள்விக்கு,
எங்கள் விருப்பமும் அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான். அதிமுக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதுதான் தமிழ்நாட்டிற்கு நல்லது. என தெரிவித்தார்.






