search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதி?
    X

    மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதி?

    • கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • உதயசூரியன் சின்னத்துக்கு பதில் தனிச் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை கூட்டணி கட்சிகளுடன் நடத்தி வருகிறது.

    இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கி உடன்பாடு கையெழுத்தாகி விட்டது.

    மேலும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் உடன்பாடு காண பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் இரு கட்சிகளும் கூடுதலாக ஒரு தொகுதியை கேட்டது. அத்துடன் உதயசூரியன் சின்னத்துக்கு பதில் தனிச் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. இதற்கு தி.மு.க. சம்மதிக்கவில்லை.

    இதனால் இக்கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு காண்பதில் இழுபறி நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில், ம.தி.மு.க.வுக்கு ஒரு மக்களவை தொகுதியை மட்டுமே ஒதுக்க தி.மு.க. முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


    இன்று காலை 11.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×