search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் தொடக்கம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் தொடக்கம்

    • நாடு முழுவதும் பாராளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.
    • உதயநிதி ஸ்டாலின் 39 தொகுதிகளில் சூறாவளி பிரசாரம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி முதல் ஜூன் மாதம் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

    முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் தொடங்குகிறது. இதனால் நாடு முழுவதும் பாராளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலை தி.மு.க. கூட்டணி தனது தோழமைக் கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்று டன் இணைந்து எதிர்கொள்கிறது. இன்று தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அனைத்தும் தெரிந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


    இதையடுத்து தி.மு.க. வேட்பாளர்களை அறிவிக்க உள்ளது. ஏற்கனவே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேர்காணல் நடத்தி தி.மு.க. வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளார். நாளை மறுநாள் (புதன்கிழமை) தி.மு.க. போட்டியிடும் 21 தொகுதி வேட்பாளர்கள் விவரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவதை தொடர்ந்து உடனடியாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளார். வேட்பு மனு தாக்கல் முடிந்து மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வருகிற 30-ந் தேதி வெளியாக உள்ளது.

    அதன் பிறகு வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் பிரசாரம் செய்ய 17 நாட்கள் மட்டுமே அவகாசம் இருக்கிறது. இதை கருத்தில் கொண்டுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த வார இறுதியில் பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவரது சூறாவளி சுற்றுப் பயணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.


    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருச்சி அருகே சிறுகனூரில் நடக்கும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பேச ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அந்த கூட்டம் வருகிற 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடை பெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பூர்வீக ஊரான திருவாரூரில் 23-ந் தேதி (சனிக்கிழமை) தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேச உள்ளார்.

    அதில் அவர் நாகை, தஞ்சை, மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேச உள்ளார். இந்த பிரசாரக் கூட்டம் எப்போது நடைபெறும் என்ற நேரம் குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஓரிரு நாட்களில் அதுபற்றி தெரிய வரும் என்று கட்சி வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருவாரூரில் தொடங்கி 39 தொகுதிகளுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளார். மொத்தம் அவர் 15 நாட்கள் சுற்றுப் பயணம் செய்து ஆதரவு திரட்ட உள்ளார். தமிழகம் முழுவதும் 15 ஊர்களில் அவர் பொதுக் கூட்டங்களில் பேச ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    அதுபோல அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 39 தொகுதிகளில் சூறாவளி பிரசாரம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

    Next Story
    ×