என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தொகுதி பங்கீடு... தி.மு.க.வுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை
    X

    தொகுதி பங்கீடு... தி.மு.க.வுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை

    • இன்று நடைபெறும் பேக்சுவார்த்தையில் எத்தனை தொகுதிகள் என்பதையும் எந்தெந்த தொகுதிகள் என்பதையும் விவாதித்து இறுதிவடிவம் கொடுக்க திட்டமிட்டுள்ளார்கள்.
    • காங்கிரஸ் கைவசம் உள்ள சில தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட விரும்புவதாகவும், ஒரு சில தொகுதிகளை கூட்டணிகட்சிகளுக்கு வழங்கதிட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது? எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியது.

    தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் முகுல்வாஸ்னிக், சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜய்குமார் ஆகியோர் இன்று சென்னை விமான நிலையம் வந்தனர். அவர்கள் நேராக சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றனர். அங்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற குழு தலைவர் செல்வ பெருந்தகை எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், செல்லக்குமார், முன்னாள் தலைவர்கன் தங்கபாலு, இளங்கோவன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

    பின்னர் அண்ணா அறிவாளயம் புறப்பட்டு சென்றார்கள். அங்கு டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க. தொகுதி பங்கீடு குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இன்று நடைபெறும் பேக்சுவார்த்தையில் எத்தனை தொகுதிகள் என்பதையும் எந்தெந்த தொகுதிகள் என்பதையும் விவாதித்து இறுதிவடிவம் கொடுக்க திட்டமிட்டுள்ளார்கள்.


    கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு கன்னியாகுமரி, விருதுநகர், திருச்சி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, ஆரணி, திருவள்ளூர், தேனி, கரூர் ஆகிய தமிழகத்தில் 9 தொகுதிகளும் புதுவையில் ஒரு தொகுதியையும் ஒதுக்கி இருந்தனர். அந்த தேர்தலில் தேனி தொகுதியை தவிர மற்ற 8 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தேனி தொகுதியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை எதிர்த்து போட்டியிட்ட ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்று இருந்தார்.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் கைவசம் உள்ள சில தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட விரும்புவதாகவும், ஒரு சில தொகுதிகளை கூட்டணிகட்சிகளுக்கு வழங்கதிட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    எனவே மாற்று தொகுதியாக எந்தெந்த தொகுதிகளை கேட்பது என்று காங்கிரஸ் தலைவர்கள் விவாதித்து எடுத்த முடிவின் அடிப்படையில் தி.மு.க.விடம் கேட்க திட்டமிட்டுள்ளார்கள்.

    Next Story
    ×