search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை மறுநாள் வெளியாகிறது
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை மறுநாள் வெளியாகிறது

    • அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பெண்கள் மற்றும் இளைஞர்களை கவரும் வகையில் பல்வேறு விசயங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • அ.தி.மு.க. கூட்டணியில் பெரிய கட்சிகள் சேராத நிலையில் சிறிய கட்சிகள் சிலவற்றுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து உள்ளார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. தயாராகி வருகிறது. தே.மு.தி.க.வுடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில் நாளைக்குள் தே.மு.தி.க.வுக்கான தொகுதிகள் இறுதி செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

    இதையடுத்து அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் நாளை மறுநாள் (21-ந்தேதி) வெளியாக உள்ளது. அன்றைய தினம் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையும் வெளியாகும் என்று தெரிகிறது. ஒருவேளை தேர்தல் அறிக்கை அன்று வெளியாகாவிட்டால் வருகிற 24-ந்தேதி திருச்சியில் நடைபெறும் தேர்தல் பிரசார தொடக்க விழா மேடையில் தேர்தல் அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பெண்கள் மற்றும் இளைஞர்களை கவரும் வகையில் பல்வேறு விசயங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் பெரிய கட்சிகள் சேராத நிலையில் சிறிய கட்சிகள் சிலவற்றுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து உள்ளார்.

    தே.மு.தி.க. தவிர மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளனர்.

    Next Story
    ×