search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க.வை எதிர்க்கும் கட்சிகள் ஒரே அணியில் இணைய வேண்டும்- நயினார் நாகேந்திரன்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தி.மு.க.வை எதிர்க்கும் கட்சிகள் ஒரே அணியில் இணைய வேண்டும்- நயினார் நாகேந்திரன்

    • ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகிய அனைவரும் தனித்தனி அணியாக பிரிந்து நிற்காமல் ஒன்று சேர்ந்து தி.மு.க.வை எதிர்க்க வேண்டும்.
    • மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்பட அனைவரும் சேர்ந்து அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெறுவதற்காக தேர்தல் பணியாற்றுவோம்.

    கன்னியாகுமரி:

    தமிழக சட்டமன்ற பா.ஜ.க. தலைவரும், நெல்லை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான நயினார் நாகேந்திரன் கன்னியாகுமரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் தலைமை அனுமதித்தால் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் நான் போட்டியிடுவேன். பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று மத்திய மந்திரி அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் ஏற்கனவே அறிவித்து இருக்கிறார்கள்.

    மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்பட அனைவரும் சேர்ந்து அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெறுவதற்காக தேர்தல் பணியாற்றுவோம்.

    கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவினால் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. பாராளுமன்ற தேர்தல் வேறு. சட்டமன்ற தேர்தல் வேறு. சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு முறையான வாக்குப்பதிவு நடைபெறும். பாராளுமன்றத்தை பொறுத்தமட்டில் யார் இந்த நாட்டினுடைய பிரதமராக வரவேண்டும் என்பதை பொறுத்து தான் வாக்கு வங்கி அமையும்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலை பொறுத்தமட்டில் தி.மு.க.வை எதிர்க்க கூடிய அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் சேர வேண்டும். அப்படி ஒன்றுபட்டு தேர்தல் களத்தை சந்தித்தால் தான் தி.மு.க.வை தோற்கடிக்க முடியும். ஆகையால் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகிய அனைவரும் தனித்தனி அணியாக பிரிந்து நிற்காமல் ஒன்று சேர்ந்து தி.மு.க.வை எதிர்க்க வேண்டும்.

    தி.மு.க.வை எதிர்க்கக் கூடிய அனைத்து கட்சிகளும் ஒரேஅணியில் இணைய வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம். திருமாவளவன் அ.தி.மு.க. கூட்டணியில் சேருவாரா? என்பது பற்றி அவர்தான் கருத்து சொல்ல வேண்டும்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் நரேந்திரமோடி தான் மீண்டும் பிரதமர் ஆவார். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. உலகத்தில் இருக்கிற மிகச் சிறந்த தலைவர் யார் என்று சொன்னால் இன்றைக்கு முதல் வரிசையில் இடம் பிடித்து இருப்பவர் பிரதமர் மோடி மட்டும் தான். எனவே இந்தியாவில் 3-வது முறையாக நரேந்திரமோடி பிரதமராக பொறுப்பு ஏற்பது உறுதி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×