என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

2 விசயங்களில் மட்டும் இந்தியா கூட்டணி ஒத்துப்போகும்- அண்ணாமலை
- ஒரு வங்கியின் பணப் பெட்டகம் என நீங்கள் நினைத்தால் அது தவறு.
- காங்கிரஸ் எம்.பி. தீரஜ்சாகு ஊழல் செய்து முறைகேடாக குவித்துள்ள ரூ.300 கோடி பண மூட்டை.
சென்னை:
ஜார்கண்ட் மாநிலம் காங்கிரஸ் எம்.பி. தீரஜ்சாகு வீட்டில் இன்று வருமான வரித்துறை சோதனை நடந்தது. அப்போது வீட்டுக்குள் கட்டு கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பணக்கட்டுகள் வீடியோவாக வெளியிடப்பட்டது.
இந்த வீடியோவை பதிவேற்றம் செய்து தனது வலைத்தள பக்கத்தில் பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது:-
இதை ஒரு வங்கியின் பணப் பெட்டகம் என நீங்கள் நினைத்தால் அது தவறு.
இது காங்கிரஸ் எம்.பி. தீரஜ்சாகு ஊழல் செய்து முறைகேடாக குவித்துள்ள ரூ.300 கோடி பண மூட்டை.
இந்தியா கூட்டணியில் உள்ள அத்தனை கட்சிகளும் ஊழல் செய்வது, சனாதன தர்மத்தை வெறுப்பது என்ற 2 விசயங்களில் மட்டுமே ஒத்துப் போவார்கள்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Next Story






