என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பா.ஜ.க.வுடன் இனி எப்பவும் கூட்டணி கிடையாது.. எடப்பாடி பழனிசாமி அதிரடி!
- பா.ஜ.க.வுடன் இன்றும் கூட்டணி இல்லை, இனி என்றும் கூட்டணி இல்லை.
- கூட்டணி முறிவு குறித்து தொண்டர்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்.
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகியது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசும் போது பா.ஜ.க. உடன் இனி எப்போதும் கூட்டணி கிடையாது என்று தெரிவித்து இருக்கிறார்.
இது பற்றி அவர் பேசும் போது, பா.ஜ.க.வுடன் இன்றும் கூட்டணி இல்லை, இனி என்றும் கூட்டணி இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைக்கப்படும். கூட்டணி முறிவால் எந்த பிரச்சினை வந்தாலும் அதனை சந்திக்க தயார். கூட்டணி முறிவு குறித்து தொண்டர்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம், என்று தெரிவித்து உள்ளார்.
மேலும் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை விரைவுப்படுத்த மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பால், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் புதிய கூட்டணி உருவாவது உறுதியாகி இருக்கிறது.