என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஓ.பி.எஸ். சிறை செல்வது உறுதி!
- வடசென்னையில் உள்ள தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய வேண்டும்.
- தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் முறையாக ஆய்வு நடத்தியிருந்தால் விபத்து நடந்திருக்காது.
கோவை:
சில ரகசியங்களை வெளியிட்டால் எடப்பாடி பழனிசாமி திகார் சிறைக்கு செல்ல நேரிடும் என நேற்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து இருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக இன்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
* ஓ.பன்னீர் செல்வம் சிறைக்கு செல்வது உறுதியாகிவிட்டது. அவர் மீதான வழக்கை விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. அதில் அவருக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்.
* ஜெயலலிதாவிற்கு ரூ.2 கோடி கடன் கொடுத்ததாக ஓபிஎஸ் சொன்னது, மோசமான வார்த்தை.
* போடி தொகுதியில் ஜெயலலிதாவிற்கு எதிராக வேலை பார்த்தவர் ஓபிஎஸ்.
* தென்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் முன்பே கணித்துச் சொன்னது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் பாதிப்பை தவிர்த்திருக்கலாம்.
* வடசென்னையில் உள்ள தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய வேண்டும். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் முறையாக ஆய்வு நடத்தியிருந்தால் விபத்து நடந்திருக்காது.
* எண்ணூரில் எண்ணெய் மற்றும் வாயுக்கசிவால் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.






