என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பெங்களூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு காரில் குட்கா கடத்திய 2 பேர் கைது

    ஒசூரில் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டபோது பெங்களூரில் இருந்து திண்டுகல்லுக்கு காரில் குட்கா கடத்திய சென்ற 2 பேரை கைது செய்தனர்.
    ஒசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடி சோதனை சாவடியில்  போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட் டிருந்தனர்.
     
    அப்போது பெங்களூரில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது,  சட்டவிரோதமாக குட்கா பொருட்களை திண்டுக்கல் பகுதிக்கு கடத்தி வந்தது தெரிய வந்தது. 

    இதை தொடர்ந்து குட்காவை கடத்தி வந்த திண்டுக்கல் மாவட்டம் , வத்தலகுண்டை சேர்ந்த  அபுதாஹிர் (30) மற்றும் தேனி மாவட்டம்  ஜி.கல்லுப்பட்டி பகுதியை சேர்ந்த  ஜியாவுல் ஹக் (வயது33) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 106 கிலோ எடை கொண்ட குட்கா பொருள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×