என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம்
    X
    பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம்

    பா.ஜ.க. வெற்றியை தடுக்க இந்தி எதிர்ப்பை தி.மு.க. கையில் எடுத்துள்ளது- பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் பேட்டி

    வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றியை தடுக்க இந்தி எதிர்ப்பை தி.மு.க. கையில் எடுத்துள்ளது என்று பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் கூறியுள்ளார்.

    அறந்தாங்கி:

    அறந்தாங்கி அருகே நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவை குறைகூறி தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் வரும் சட்டப்பேரவை தேர்தலில் அந்த நிலை இருக்காது. பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும். அந்த வெற்றியை தடுப்பதற்காக தி.மு.க. 1965 ஆம் ஆண்டு பார்முலாவான இந்தி எதிர்ப்பை கையில் எடுத்துள்ளது.

    பா.ஜ.க. தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்க வேண்டும் என்று எப்போதும் நினைக்கவில்லை. மும்மொழிக் கொள்கையால் தமிழர் பண்பாடு, தமிழர் கலாச்சாரம் வளரும். இந்தி மொழியை கற்பதால் வடநாட்டில் வாழும் தமிழர்கள் நமது தாய் மொழியை கற்பதற்கு உதவியாக இருக்கும்.

    இந்தி வேண்டாம் போடா என்று டி-சர்ட்டில் எழுதி அணிந்துள்ளவர்கள் இந்தியில் பேசுவதை சமூக ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள். நாங்கள் (பா.ஜ.க.வினர்) இந்தி வேண்டாம் என்றுதான் சொல்லுகிறோம். எங்களுக்கு இந்தி தெரியாது. விருப்பப்பட்டால் படியுங்கள் என்று தான் கூறுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாநில மகளிரணி செயலாளர் கவிதா ஸ்ரீகாந்த், மாவட்ட இளைஞரணி தலைவர் சக்தி குமரன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஜெயபாண்டியன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

    Next Story
    ×