search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழிசை
    X
    தமிழிசை

    மு.க.ஸ்டாலின் புலி அல்ல, பூனை- தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி

    புலி பதுங்குவது பாயத்தான் என்று மு.க.ஸ்டாலின் கூறினாலும் அது பூனையாக அல்லவா உள்ளது என்று தமிழிசை கூறியுள்ளார்.

    கே.கே.நகர்:

    தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒரே நாடு, ஒரே ரே‌ஷன் கார்டு என்பது நல்ல திட்டம். இந்த திட்டத்தை 2012 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தான் தொடங்கி வைத்தது. இன்று அந்த கூட்டணியில் உள்ள வைகோ உள்ளிட்டோர் எதிர்க்கிறார்கள். வைகோ போன்றவர்கள் எதிர்த்தாலே அந்த திட்டம் நல்ல திட்டம் தான்.

    மத்திய அரசு செயல்படுத்தும் எல்லாவற்றையும் சிலர் விமர்சனம் செய்கிறார்கள். அத்தகைய எதிர் விமர்சனங்களை நாங்கள் முறியடிப்போம். எதிர் விமர்சனங்களால் தான் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்.

    தண்ணீர் பிரச்சினையை தீர்க்க மழை நீர் சேகரிப்பு திட்டத்தை இயக்கமாகவே நடைமுறைப்படுத்த வேண்டும். தண்ணீர் பிரச்சினை விவகாரத்தில் தமிழக அரசை விமர்சித்து கிரண்பேடி கருத்து கூறியிருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்து.

    குடிநீர் பிரச்சனை குறித்து பேச தி.மு.க.விற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. அவர்கள் ஆட்சியில் இருந்த போது எந்த தொலைநோக்கு திட்டத்தையும் அவர்கள் செயல்படுத்தவில்லை. மாநிலங்களிடையே பிரிவினையை ஏற்படுத்திய தி.மு.க. ஜோலார்பேட்டையிலிருந்து தண்ணீர் எடுத்து வரக் கூடாது என கூறுவதன் மூலம் மாவட்டங்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி வருகிறார்கள்.

    தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அவர் மீதே நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிறைவேற்றி வருகிறார். அவர் புலி அல்ல, பூனையாகத்தான் தெரிகிறார். புலி பதுங்குவது பாயத் தான் என்று மு.க.ஸ்டாலின் கூறினாலும் அது பூனையாக அல்லவா உள்ளது. தி.மு.க. வில் ஸ்டாலின் குடும்பத்தினர் மட்டுமே எம்.பி., எம்.எல். ஏ. பதவிகளை அனுபவிக்கிறார்கள். ஸ்டாலின் தன் மீதே ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்.


    கூட்டணி என்பது தேர்தலுக்கானது. தேர்தல் வரும் போது கூட்டணி பற்றி பேசுவோம். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு செயல் பாடு இருக்கிறது. எங்கள் கட்சியின் செயல்பாடு படி நாங்கள் செயல்படுகிறோம். தண்ணீர் பிரச்சினையை அரசியலாக்கக்கூடாது. கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் வரும் போது தண்ணீர் பிரச்சினை இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×