என் மலர்
செய்திகள்

அதிமுக கூட்டணியை ஆதரித்து நடிகர் கார்த்திக் 12 நாள் பிரசாரம்
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடிகர் கார்த்திக் 12 நாள் தேர்தல் பிரசாரம் செய்கிறார். #LokSabhaElections2019 #ADMK #Karthik
சென்னை:
மனிதஉரிமை காக்கும் கட்சியின் தலைவரும், நடிகருமான கார்த்திக் சமீபத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
அதைதொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப்போவதாகவும் கார்த்திக் அறிவித்தார். அதன்படி நாளைமுதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
நாளை (புதன்கிழமை) தூத்துக்குடியில் பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து பேசுகிறார். நாளை மறு நாளும் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் பிரசாரம் செய்கிறார்.
5-ந்தேதி நெல்லை தொகுதியிலும், 6-ந்தேதி தென்காசியிலும், 7-ந்தேதி விருந்துநகரிலும் பிரசாரம் செய்கிறார். 9-ந்தேதி தேனி, 10-ந்தேதி திண்டுக்கல், 11-ந்தேதி மதுரையிலும் அ.தி.மு.க. கூட்டணி வேட் பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
13-ந்தேதி திருச்சியில் பிரசாரம் செய்கிறார். 14-ந்தேதி ஸ்ரீபெரும்புதூரிலும், 15-ந்தேதி காஞ்சிபுரத்திலும், 16-ந்தேதி தென் சென்னையிலும் கார்த்திக் பிரசாரம் செய்கிறார். நாளை பிரசாரத்தை தொடங்கும் கார்த்திக் மொத்தம் 12 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். #LokSabhaElections2019 #ADMK #Karthik

Next Story