search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    3 போலி சாமிகளை யாரும் நம்பாதீர்கள்- நடிகை ஸ்ரீபிரியா கடும் தாக்கு
    X

    3 போலி சாமிகளை யாரும் நம்பாதீர்கள்- நடிகை ஸ்ரீபிரியா கடும் தாக்கு

    தமிழகம், புதுவையில் உள்ள 3 போலி சாமிகளை யாரும் நம்பாதீர்கள் என்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நடிகை ஸ்ரீபிரியா பேசினார். #LokSabhaElections2019 #MakkalNeedhiMaiam #KamalHaasan
    புதுச்சேரி:

    புதுவையில் நடந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கட்சியின் சிறப்பு பேச்சாளர் ஸ்ரீபிரியா பேசியதாவது:-

    மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்டு 13 மாதங்கள் ஆகிறது. நாம் இப்போது முதன் முறையாக தேர்தலை சந்திக்கிறோம். புதுவை மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை அதிகம் நடக்கிறது. அவர்களுக்கு உரிய பாதுகாப்பும் இல்லை.

    புதுவையில் கவர்னராக பெண் உள்ளார். அதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும் என்று கருதினேன். ஆனால் அவர் முதல்-அமைச்சருடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். புதுவையில் இரண்டு சாமிகளும், தமிழகத்தில் ஒரு சாமியும் உள்ளனர். இவர்களால் எந்த நன்மையும் இல்லை. இந்த போலி சாமியார்களை யாரும் நம்பாதீர்கள்.

    பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும். பெண்களுக்காக தனி காவல் துறை, சொத்துரிமை, பெண்களுக்கு அனைத்திலும் சமபங்கு ஆகியவற்றை பெற்றுத்தர மக்கள் நீதி மய்யத்திற்கு வாக்கு அளியுங்கள். அரசியலை யாரும் தவிர்க்க வேண்டாம்.

    நீங்கள் அரசியலை தவிர்த்தால் பொதுவாழ்வில் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் ஆட்சிக்கு வந்து விடுவார்கள். பெண்கள் நினைத்தால் சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வர முடியும். அந்த மாற்றத்துக்கு மக்கள் நீதி மய்யத்துக்கு ஆதரவு தாருங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #MakkalNeedhiMaiam #KamalHaasan
    Next Story
    ×