என் மலர்
செய்திகள்

திருமங்கலம் அருகே வகுப்பறையில் மயங்கி விழுந்து 10-ம் வகுப்பு மாணவி பலி
பேரையூர்:
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள நல்லதேவன்பட்டி மேற்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி. கணவரை இழந்த இவர் அரசு விடுதியில் வார்டனாக பணியாற்றி வருகிறார்.
இவரது மகள் சுபிக்ஷா (வயது 14). இவர் திருமங்கலம் அருகே உள்ள அச்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
சுபிக்ஷாவுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் வகுப்பறையில் அமர்ந்து பாடங்களை கவனித்துக் கொண்டு இருந்தார்.
அப்போது சுபிக்ஷா திடீரென மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவ- மாணவிகள் உடனே ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் மாணவியை திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுபிக்ஷா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள தாலுகா போலீசார் மாணவியின் சாவு குறித்து விசாரித்து வருகின்றனர்.