search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முற்றுகை போராட்டத்தில் கைதான திருமாவளவன், வேல்முருகன், பாலகிருஷ்ணன் ஆகியோரை தினகரன் சந்தித்து பேசிய காட்சி.
    X
    முற்றுகை போராட்டத்தில் கைதான திருமாவளவன், வேல்முருகன், பாலகிருஷ்ணன் ஆகியோரை தினகரன் சந்தித்து பேசிய காட்சி.

    மக்கள் பிரச்சனைக்காக தி.மு.க. கூப்பிட்டாலும் இணைந்து போராடுவோம்- தினகரன்

    மக்கள் பிரச்சனைக்காக தி.மு.க. உள்ளிட்ட எந்த கட்சி போராட்டத்திற்கு அழைத்தாலும் நாங்கள் கலந்து கொள்ள தயாராக இருக்கிறோம் என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே தீபாம்பாள்புரம், மருவத்தூர் ஆகிய இடங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை கண்டித்து எதிர்ப்பு போராட்டக்குழு சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது.

    இதில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேலமுருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    கைதான தலைவர்களை அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் கைதான திருமாவளவன், வேல்முருகன், ஜவாஹூருல்லா , பாலகிருஷ்ணன் ஆகியோரை அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேரில் சந்தித்து பேசினார்.

    இதன்பின்னர் தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஓ.என்.ஜி.சி. பணிக்கு எதிராக போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்ட தலைவர்களை சந்தித்து வாழ்த்து கூறவே நான் வந்தேன். அரசியல் பேசவில்லை. மக்கள் பிரச்சனைகளுக்காக கட்சி பாகுபாடு இன்றி அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். கர்நாடக சட்டசபை தேர்தலால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தாலும், தேர்தல் முடியும் வரை மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது. கர்நாடக தேர்தலை மனதில் வைத்தே அவர்கள் காலம் தாழ்த்தி வருகிறார்கள்.

    தமிழக அமைச்சர்கள் பதவியை காப்பாற்றிக்கொள்ள மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க மாட்டார்கள். மக்கள்தான் போராட வேண்டும்.

    மக்கள் பிரச்சனைக்காக தி.மு.க. உள்ளிட்ட எந்த கட்சி போராட்டத்திற்கு அழைத்தாலும் நாங்கள் கலந்து கொள்ள தயாராக இருக்கிறோம். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அடுத்த மாதம்(ஏப்ரல்) 8-ந் தேதி தூத்துக்குடியில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    Next Story
    ×