என் மலர்

    செய்திகள்

    நெல்லையில் தாமிரபரணி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது
    X
    நெல்லையில் தாமிரபரணி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது

    நெல்லையில் கனமழை: பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறில் நீர்மட்டம் மேலும் 3 அடி உயர்வு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்துவருவதால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் மேலும் 3 அடி உயர்ந்துள்ளது.
    நெல்லை:

    வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    மாவட்டத்தில் உள்ள பிரதான பாசன அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் ஏற்கனவே பெய்த மழையினால் 100 அடியை தாண்டி உள்ளது. இந்த நிலையில் தற்போதைய மழைக்கு அணையின் நீர்மட்டம் மேலும் அதிகரித்துள்ளது.

    நேற்று இந்த அணை நீர்மட்டம் 104.45 அடியாக இருந்தது. இரவு பெய்த மழையினால் இந்த அணை மேலும் 3 அடி உயர்ந்து 107.45 அடியாக அதிகரித்தது. அணைக்கு வினாடிக்கு 2881.22 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 505 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

    சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 117.91 அடியாக இருந்தது. மேலும் 3 அடி உயர்ந்து 121.36 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் நேற்று 87.20 அடியாக இருந்தது. இன்று 90.25 அடியாக அதிகரித்தது. அணைக்கு வினாடிக்கு 2,692 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளில் ஒன்றான கடனா அணையின் நீர்மட்டம் தொடர்மழை காரணமாக வேகமாக நிரம்பி வந்தது. நேற்று இந்த அணையின் நீர்மட்டம் 83 அடியாக இருந்தது. இதன் மொத்த கொள்ளளவு 85 அடியாகும். இரவு பெய்த மழையினால் இந்த அணை இன்று காலை முழுகொள்ளளவை எட்டியது. அணைக்கு வினாடிக்கு வரும் 450 கனஅடி தண்ணீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    ராமநதி அணையின் நீர்மட்டம் நேற்று 66 அடியாக இருந்தது. இன்று இது 67.50 அடியாக அதிகரித்துள்ளது. நேற்று 28.50 அடியாக இருந்த வடக்கு பச்சையாறு அணையின் நீர்மட்டம் 29.50 அடியாகவும், 34 அடியாக இருந்த கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 37 அடியாகவும் உயர்ந்துள்ளன. குண்டாறு அணை ஏற்கனவே நிரம்பியுள்ளது.

    அணைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் பிசான சாகுபடி பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. அணைப்பகுதியில் இன்று காலை வரை பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    நம்பியாறு -99, கொடுமுடியாறு - 60, ராதாபுரம்-50, பாபநாசம்-43, செங்கோட்டை-37, ஆய்க்குடி-36, மணிமுத்தாறு-31, பாளையங்கோட்டை-30.40, குண்டாறு-30, நாங்குநேரி-30, கடனா-25, சேர்வலாறு-24, ராமநதி-20, சேரன்மகாதேவி-13, தென்காசி-10.40, அம்பை-9.20, கருப்பாநதி-5, நெல்லை-4, அடவிநயினார்-3. சங்கரன்கோவில்-1.


    Next Story
    ×