என் மலர்
செய்திகள்

தஞ்சையில் டெங்கு காய்ச்சல் ஒழிய வேண்டி கிறிஸ்தவர்கள் 53 மணி நேரம் பிரார்த்தனை
தஞ்சாவூர்:
தஞ்சை கீழவாசல் புனித ஜெபமாலை மாதா ஆலயத்தில் உலக அமைதி, மழை வளம் வேண்டியும் மற்றும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் ஒழிய வேண்டியும் கிறிஸ்தவர்கள் 53 மணி நேர தொடர் பிரார்த்தனையை கடந்த 28-ந் தேதி மதியம் 1 மணிக்கு தொடங்கினர்.
இதை ஆலய நிர்வாகி ஏசு தனராஜ் தொடங்கி வைத்தார். கடந்த 2 நாட்களாக ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
நேற்று மாலை 6 மணியளவில் தொடர் பிரார்த்தனை ஜெப வழி பாட்டுடன் முடிவடைந்தது. இதை அருட் தந்தை ஜான் அமலதாஸ் முடித்து வைத்தார். இதில் தஞ்சை பகுதியை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
ஜெபமாலையில் 53 மணிகள் இருக்கும். இதை குறிக்கும் விதமாக 53 மணிநேர தொடர் பிரார்த்தனை நடந்தப்பட்டது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்து வருவதால் டெங்கு நிரந்தரமாக ஓழிய வேண்டி ஏராளமானவர்கள் பிரார்த்தனை செய்தனர்.