என் மலர்

  செய்திகள்

  பார்வர்டு பிளாக் - காங். - பா.ஜ.க - காங். - தனிக்கட்சி - பா.ஜ.க: தமிழக புதிய கவர்னரின் அரசியல் வாழ்க்கை
  X

  பார்வர்டு பிளாக் - காங். - பா.ஜ.க - காங். - தனிக்கட்சி - பா.ஜ.க: தமிழக புதிய கவர்னரின் அரசியல் வாழ்க்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித் தேசிய கட்சிகளாக காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வி சார்பில் மக்களவைக்குள் சென்றுள்ளார்.
  புதுடெல்லி:

  கடந்த 1940-ம் ஆண்டு மராட்டியத்தின் விதர்பா பகுதியில் பிறந்த பன்வாரிலால் புரோஹித் முதன் முதலாக தனது அரசியல் வாழ்க்கையை அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் தொடங்கினார். பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். தேசிய காங்கிரஸ் மற்றும் இந்திரா காங்கிரஸ் என கட்சி பிளவு பட்டபோது இந்திரா காங்கிரஸ் கட்சி சார்பில் 1978-ல் நாக்பூர் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  1980-ல் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து, 1984 மற்றும் 1989 ஆண்டில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றார். பின்னர், காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்த அவர் 1991-ல் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

  1996-ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பன்வாரிலால், 1999-ல் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஆனால், அந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவர் வெற்றி பெறவில்லை.

  2003-ம் ஆண்டில் விதர்பா ராஜ்ய கட்சி என்று தனிக்கட்சி ஆரம்பித்த பன்வாரிலால் 2004 தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2009-ல் மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதனையடுத்து, தீவிர அரசியலில் ஒதுங்கியிருந்த அவர் 2016-ம் ஆண்டில் மேகாலயா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார்.

  தற்போது, அவர் தமிழகத்தின் புதிய நிரந்தர கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  Next Story
  ×