என் மலர்

  செய்திகள்

  டெங்கு காய்ச்சலுக்கு முடிவு கட்டவேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
  X

  டெங்கு காய்ச்சலுக்கு முடிவு கட்டவேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திடக்கழிவு மேலாண்மை விதிகளை முழுமையாக நிறைவேற்றி டெங்கு காய்ச்சலுக்கு முடிவு கட்டவேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
  சென்னை:

  பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  டெங்கு காய்ச்சலால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதற்கு தமிழக அரசின் செயல்படாத தன்மைதான் முழு காரணம் ஆகும். இந்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 எனும் சட்டப்பூர்வ விதிகளை தமிழ்நாடு அரசு முறையாக நிறைவேற்றியிருந்தால் இப்போதைய டெங்கு காய்ச்சல் தடுக்கப்பட்டிருக்கும்.

  தமிழ்நாடு அரசு கடமை தவறியதே இப்போதைய டெங்கு உயிரிழப்புகளுக்கு காரணமாகும். குப்பை மேலாண்மைக்கான விதிகளை மாநில அரசுகளும், உள்ளாட்சி அமைப்புகளும் முறையாக செயல்படுத்தத் தவறிவிட்டன. மாநில அரசுகளின் மெத்தனப்போக்கை கண்டித்த இந்திய பசுமைத் தீர்ப்பாயம் குப்பை மேலாண்மை விதிகளை தமிழக நகரங்கள் உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து நகரங்களும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

  இதற்கான பிரசார இயக்கத்தை தொடங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ஆனால், இன்னமும் கூட சட்ட விதிகள் வெற்று காகிதமாகவே உள்ளன. இந்திய மாநகரங்களில் அதிக குப்பையை உருவாக்கும் மாநகரம் சென்னை. குப்பை மேலாண்மையில் இந்தியாவிலேயே கடைசி இடத்தில் இருப்பது சென்னை மாநகரம் தான். எனவே, குப்பை பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டிய கட்டாயம் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டுக்கு அதிகம் இருக்கிறது.

  டெங்கு தாக்குதலின் பழியை மக்கள் மீது போட்டு, டெங்குவிடம் இருந்து காத்துக்கொள்ளும் பொறுப்பையும் மக்கள் மீதே சுமத்தும் போக்கினை கைவிட்டு, டெங்கு தாக்குதலுக்கு முதன்மை காரணமாகவுள்ள தமிழ்நாடு அரசும், நகர்ப்புற உள்ளாட்சிகளும் இந்திய அரசின் 2016 திடக்கழிவு மேலாண்மை விதிகளை முழுமையாக நிறைவேற்றி டெங்கு காய்ச்சலுக்கு முடிவு கட்டவேண்டும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  Next Story
  ×